Close
நவம்பர் 22, 2024 4:33 மணி

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஈரோடு

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கம்

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத்துறை மற்றும் பிரணவ் தமிழியல் ஆய்விதழும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் கலை பண்பாட்டு மரபுகள் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 28.03.2023 அன்று கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கின்  தொடக்க நிகழ்வில் வேளாளர் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.கு ஜெயந்தி  வரவேற்புரையாற்றினார். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆர்.நிர்மலா தேவி  சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்ப் பல்கலைக் கழக மாண்பமை துணை வேந்தர் பேராசிரியர் முனைவர். வி.திருவள்ளுவன் தலைமை வகித்து பேசுகையில்,  தமிழர் வாழ்வில் பொதிந்துள்ள பண்பாட்டு மரபுகளையும் தமிழர் தம் வாழ்வியல் சிந்தனைகளையும் கலைகளின் அன்றைய நிலைகளும் கலைகளை இன்று பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கின் ஆய்வாளர்களிமிருந்து பெறப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் நூலாக்கம் தொகுப்பை  துணை வேந்தர்  வெளியிட, கல்லூரித் தாளாளர்  பெற்றுக் கொண்டார்.

வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர்  செ. து சந்திரசேகர்  வாழ்த்துரையில், மறைந்து போன மரபு விழுமியங்களை மீட்டெடுப்பதன் மூலம் நம் பண்பாட்டை உலகறியச் செய்வதற்கும் இளைய தலைமுறையினர் பண்பாட்டைக் காப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைத்துறைத் தலைவர் முனைவர்க. திலகவதி  கருத்தரங்கின் நோக்கவுரையில், இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் கலைகளையும் பண்பாட்டையும் வரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறினார்

இலங்கை கொழும்பு ஐவா கல்லூரியின் தலைவர் டாக்டர் எச்.எம். எம். முனாசிக் பேசுகையில்,  இலங்கை வாழ் மக்கள் கலைகளையும் பண்பாட்டையும் போற்றும் விதத்தினை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஜெ சுமதி கருத்தரங்க இணைப்புரை வழங்கினார். பிரணவ் தமிழியல் ஆய்விதழின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் சீதாலட்சுமி  நன்றி கூறினார்.

பிற்பகல் அமர்வுத் தலைவரின் முன்னிலையில் ஆய்வாளர்கள் தங்களுடைய கட்டுரையின் சாரத்தினை எடுத்துரைத்தார்கள். மதியம் மூன்று மணியளவில் கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.

கருத்தரங்கில் தமிழ்ப்பல்கலைக் கழக அறிவியல்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர்.ரெ.நீலகண்டன்  சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) பேராசிரியர் முனைவர் சி.தியாகராஜன்  நிறைவு விழாப் பேருரையாற்றினார். வேளாளர் மகளி்ர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ந.மு.கவிதா  நன்றி  கூறினார்.

கருத்தரங்கை முனைவர் ஆர்.நிர்மலாதேவி, முனைவர் க.திலகவதி,தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை,பிரணவ் தமிழியல் ஆய்விதழ் தலைவர் முனைவர் இரா. சீதாலட்சுமி சுப்ரமணியன், முதல்வர் முனைவர் செ.கு.ஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top