கோபி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் மணியக்காரன் புதூர் அரசுப்பள்ளிக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் வழங்கினார்.
கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணியக்காரன் புதூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகளுடன் கூடிய மேசை வழங்க வேண்டுமென பள்ளியின் தலைமை ஆசிரியர் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று பள்ளிக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 20 இருக்கைகளுடன் கூடிய மேசையினை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிக ளுக்கு மேசை இருக்கைகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி , முன்னாள் எம்பி சத்யபாமா , யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், எம்ஜிஆர் மன்ற அருள்ராமசந்திரன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் குமாரசாமி,அண்ணாதுரை உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்