மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட வுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு புதுக்கோட்டைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக் கலாம்.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) ‘ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 (Combined Graduate Level Examination, 2023) தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் ‘B” மற்றும் குரூப் ‘C” நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடையவிண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும்,விவரங்கள்https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdfஎன்றஇணையதள முகவரி யிலும் உள்ளது.
இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுக ளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப் பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்க ளிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் 03 மையங்க ளிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்க ளில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியா ளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment’ மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘AIM TN’ என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 20.04.2023 அன்று முதல் உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி சிறந்த வல்லுநர் களைக் கொண்டு நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இத்தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதா ரர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தி னை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.