கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தை மாவட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்,கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தை புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளை கேட்டறிந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற கற்றல் கற்பித்தல் முறைகளை பார்வையிட்டார்.
குழந்தைகளுக்கு இயன்முறை மருத்துவர் மூலம் வழங்கப் படும் பயிற்சியில் குழந்தைகள் முன்னேற்றம் குறித்து பெற்றோர்களிடம் கேட்டு கேட்டறிந்து குழந்தைக ளுக்கான உதவி உபரணங்கள் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடைந்ததையும் அதன் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்பாசிரி யர்களின் தொடர்பணி குறித்து ஆய்வு செய்து ஆலோசனை களை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜான் சுரேஷ், ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தார்.