Close
செப்டம்பர் 20, 2024 6:46 காலை

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் பணியிட மாறுதல்

சென்னை

20 சிஇஓ- பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு :I11 -ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி யிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய  திருவளர்ச்செல்வி துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னைக்கும்.

ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய பெ.அய்யண்ணன், சென்னை  துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும்கல்வியியல் பணிகள் கழகத்துக்கும்

விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய  அ. ஞானகௌரி,  தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும்

கோயமுத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி, சென்னை தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குநர் (நிர்வாகம்) ஆகவும்,

பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும்,

தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவக்குமார், திருச்சிராப்பள்ளிமாவட்டமுதன்மைக் கல்வி அலுவலராகவும்,

கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர்   அ. புகழேந்தி,
திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும்,

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், கன்னியாகுமரி மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலராகவும்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சே. மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும்,

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  மு.கபீர்,
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும்,

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி,  திருவள்ளூர் மாவட்ட  முதன்மைக் கல்வி
அலுவலராகவும்,

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  த.இராமன்,
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும்,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநர்  பி.ஏ.ஆறுமுகம், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும்,

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவவர் எம்.முத்தையா, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,

துணை இயக்குநர் (சட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை, க. பாலதண்டாயுதபாணி, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராகவும்

சென்னை தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் எம். மஞ்சுளா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா

ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் எல். சுமதி, கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,

சென்னை  ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர்
ஜெ.ஏ.குழந்தைராஜன், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,
சென்னை தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குநர் (நிர்வாகம்) பெதிருநாவுக்கரசு, சென்னை தொடக்கக்கல்வி இயக்ககம், துணை இயக்குநர் (சட்டம் பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாணை உடனடியாக நடை முறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top