Close
நவம்பர் 22, 2024 4:28 காலை

கரிசல் எழுத்தின் பிதாமகன் கி.ரா -வை நினைவு கூர்வோம்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

கரிசல் எழுத்தாளர் கி.ரா. நினைவுநாள் இன்று

சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங் களையும் பதிவு செய்த கி.ரா  (கி.ராஜாநாரயணன்) -வின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது என சொல்லலாம்.

ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டு களுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்தவர்.

மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல என்பது நமக்கு தெரியும். வண்ண நிலவன் ஜேம்ஸ் ஜாயிஸின் டப்ளினர்ஸ் தொகுப்பிற்கு இணையாக தாமிர பரணி கதை தொகுப்பில் சொல்லி செல்லும் போது, அதை ஒரு வாசகனாக நாமும் உணரமுடிந்தது.

கதைகளில் சம்பவங்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், மனித நம்பிக்கைகள், சடங்குகள், வெயில், மழை, காற்று, மண் என்று நுட்பமாக விரிந்து கொண்டே போனதோடு தனித்துவமான கிராமத்து சொற்கள், அசலான கேலி, பாலியல் சார்ந்த பதிவுகள் என தனது கதையுலகத்தை விசாலமாக்கி கொண்டே போகிற கி. ரா -வை வாசித்தபோது, மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்குவது அவ்வளவு எளிதன்று என்பதை உணரமுடிந்தது. அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதையும் உள்வாங்கி கொள்ள முடிகிறது நம்மால்.

ஒரு படைப்பால் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். பல படைப்புகள் அதற்கு உதாரணம். அதுக்காக எல்லா கதைகளும் மாற்றத்தை உருவாக்கி விடாது. சில கதைகள் சமூகச் சூழலை மட்டும் சொல்லும். சில கதைகள் தீர்வு சொல்லும். சில கதைகள் ஒன்றுமே சொல்லாமலும் இருக்கும். எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. கி.ரா வின் படைப்புகள் எந்த மாதிரியானவை என்பதை அவரை வாசித்தவர்களே வகைப்படுத்திக்கொள்வார்கள்..,

பாட்டி மடியில் படுத்தபடி கதை கேட்ட பருவத்திற்கு பிறகு
பாட்டியின்உருவத்தில்நமக்குகதைசொன்னகரிசல்இலக்கியத் தின் தந்தை கி.ரா..நம்மிடம் இல்லை..கி. ரா -வின் நினைவு நாள் இன்று.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top