Close
மே 10, 2024 11:50 காலை

ரவீந்தரநாத் தாகூரின் நினைவாக..

புதுக்கோட்டை

ரவீந்தரநாத் தாகூர்

தாகூர் “கீதாஞ்சலியை” எழுதி வெளியிட்ட பின்னர், இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமே என்று நினைத்து கொண்டாராம்.
எல்லா படைப்பாளிகளுக்கும் எழுகிற இயல்பான எண்ணம் தான். தாகூர் தன்னுடைய கீதாஞ்சலியில் சில பாடல்களில் தனக்குள்ளேயே உரையாடுகிறார், சில பாடல்களில் இயற்கையுடன், சில பாடல்களில் இறைவனிடம் உரையாடுகிறார்.

கூர்ந்து வாசிக்கையில் காதலியுடன் உரையாடுவது கடவுளிடம் உரையாடுவது போலவும், கடவுளிடம் உரையாடுவது காதலியுடன் உரையாடுவது போலவும் நமக்கு தோன்றும்.

1912 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட பத்து பக்கங்களுக்கு மேல் டபில்யூ. பி. யீட்ஸ் எழுதிய கீதாஞ்சலிக்கான முன்னுரையை வாசிக்கும் போது தான், தாகூரின் படைப்புலகத்திற்குள் ஆழ்ந்து பயணிக்க வேண்டிய ஆர்வம் நமக்குள் உருவாகிறது.

வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு தாகூரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்கத்திய நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின.

அதன் விளைவு தான் கீதாஞ்சலிக்குக் கிடைத்தது நோபல் பரிசு. நம் மொழியில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கான ஆகக்கூடிய தகுதிகள் பல படைப்புகளுக்கு இருந்தாலும், அதை அந்த இடத்திற்கு எடுத்து செல்ல தவறிவிடுகிறோம்.

களைத்து மயங்கும் இரவில்
சளைத்து, உன்னை நம்பி
பொறுப்பை எல்லோம்
உன்மேல் போட்டு விட்டு,
நித்திரையில் என்னைத் தள்ளி
புரண்டு போராடாமல்
பொத்தெனச் சாய வேண்டும் நான் — இப்படியான கீதங்களின் தொகுப்பை வாய்க்கும்போது, வாசியுங்கள். பல வருடங்களுக்கு பிறகு, கிடப்பில் போட்டு திரும்ப வாசிக்கிற போது, அந்த படைப்பு ஒரு புதிய செய்தியை, வேறொரு பரிணாமத்தில் சொல்லக்கூடும்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர்# 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top