Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

பகவதி முத்துமாரிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

புதுக்கோட்டை

புதுகை பகவதி மாரியம்மன் கோயிலில் நடந்த விளக்குபூஜை

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதி கீழ்புறம்  உள்ள பிரசித்தி பெற்ற     ஸ்ரீ பகவதி முத்துமாரிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலின் பூச்செரிதல் விழா விமரிசையாக நடைபெற் றது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுக ளுடன் , அம்மன் வீதியுலா நடைபெற்றது.  தினமும் மண்டகப் படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான   திருவிளக்கு பூஜை யில்    பெண்கள் .கலந்து கொண்டு வழிபட்டனர்.  ஸ்ரீ பகவதி முத்துமாரியம்மன் சிறப்பு மூலவர் முத்துமாரிஅம்மன் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும், உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஏற்பாடுகளை  வைரவக்குருக்கள்.நடராஜன்குருக்கள் மற்றும் உஷாராணி  விழாக்குழுவினர், சிறப்பாகச் செய்தனர். இரவு   ஸ்ரீ பகவதி முத்துமாரியம்மன்சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது. கோவிலில்  பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top