புதுக்கோட்டை மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை (22.05.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 283 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56,500 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) திரு.ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.