Close
செப்டம்பர் 20, 2024 5:29 காலை

புதுகையில் ஜூன் 10, 11 ல் இந்திய மாணவர்- வாலிபர் சங்கம் சார்பில் உலக திரைப்படவிழா

புதுக்கோட்டை

புதுகையில் உலக திரைப்பட விழா

இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் நடத்தும் உலக திரைப்படவிழா புதுக்கோட்டையில் சனிக்கிழமை  தொடங்குகிறது.

இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நடத்தும் உலகத் திரைப்பட விழா ஜூன் 10, 11  (சனி, ஞாயிறு) தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை வி.சி. திரையரங்கில் நடைபெறும் திரைப்பட விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு நாடுகளை, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 10 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஒவ்வொரு படமும் திரையிடலுக்கு முன்பாக அறிமுகமும், திரையிடல் முடிந்த பிறகு விவாதமும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுகளில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திரைப்பட இயக்குனர்கள் பாண்டிராஜ், அயலி மதன்.

திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், இந்திய மாணவர் சஙக் மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top