Close
நவம்பர் 22, 2024 2:14 மணி

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான்: திருச்சி எம்பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை ஞாயிற்றுக்கிழமை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு செய்தார்,
பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் எம்பி    கூறியதாவது:
மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். தேர்தலுக்கு முன்பு சிலர் ஆதரிப்பார்கள், தேர்தலுக்குப் பிறகு சிலர் ஆதரிப்பார்கள்.  எப்படியும் காங்கிரஸை மையப்படுத்தி தான் தேர்தல் நடைபெறும்.
அமலாக்கத்துறை என்றைக்காவது பாஜக ஆளும் மாநிலங்க ளிலோ அல்லது பாஜகவை ஆதரிக்கும் முதல்வர்களைக் கொண்ட மாநிலங்களிலோ சோதனை நடத்தியிருக் கிறார்களா, கைது செய்திருக்கிறார்களா தலைமைச் செயலகங்களில் சோதனை நடத்தியிருக்கிறார்களா  என்றால் இல்லை என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமாகும்.
தொடர்ச்சியாக காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி ஆளும் மாநிலங்களில்தானே இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
ஆளுநர் தொடர்ந்து விளம்பர வெளிச்சத்தை நோக்கியே பேசிக் கொண்டிருக்கிறார். ஒன்று  அவர் மத்திய அரசு சொல்லி இவ்வாறு பேசி வர வேண்டும் அல்லது ஏதாவது பிரச்னை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்தின்படி நின்று அதே நேரத்தில் மக்கள் பிரச்னைகளை திமுக கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. பலரும் நினைப்பதைப் போல திமுகவுடன் சண்டை போட முடியாது.
உலகில் தொன்மையான முதல் மொழி தமிழ்தான். தமிழை யாராலும் தவிர்க்க முடியாது. அதனாலேயே மோடி தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆதரவாகப் பேசி வருவதால்,  ஒட்டு மொத்த தமிழர்களும்  பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள்.
பாட்னாவில் நடைபெற்றது முதல் கூட்டம்தான். ஓரிரு மணி நேரங்களில் ஒத்தகருத்தை எட்டிவிட முடியாது. அடுத்த கூட்டத்தில் அனைவரும் ஒரே குரலில் ஒத்து வருவார்கள்.
வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் என்னுடை ஆசையும். அது நிறைவேற வேண்டும் எனக் கடவுளை வேண்டுகிறேன் என்றார் திருநாவுக்கரசர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top