புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம் தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற வுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.