Close
நவம்பர் 22, 2024 11:27 காலை

மூன்று வார விடுமுறைக்குப்பின் இங்கிலாந்தில் சங்கர்..

அயலகத்தமிழர்கள்

இங்கிலாந்திலிருந்து சங்கர

மூன்று வார தமிழக விடுமுறைக்கு இங்கிலாந்து திரும்பிய
பிறகு, வீட்டு தோட்டத்தை பார்வையிட்ட போது
பெருத்த மாற்றம் தெரிகிறது.

நானில்லாத இந்த மூன்று வாரங்களில், மற்ற அலுவல்களுக்கு மத்தியில்தோட்டத்தை பராமரித்த அன்பு மனைவியை பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும், இணைந்து செய்கிற எல்லா விஷயத்திலும், ஒரே விதமான ரசனையும், ஈர்ப்பும், ஈடுபாடும், நாட்டமும் ஒன்றாக இருக்கிற போது, அதில் நஷ்டமோ கஷ்டமோ வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி நஷ்டமே வந்தாலும் அது கஷ்டமாகவே தெரிய போவதில்லை.

சின்னதாக இருந்த செடிகள்,பெரிதாக வளர்ந்து விட்டன.
பூக்காமல் இருந்தவை பூக்க ஆரம்பித்து விட்டன. பூத்து இருந்தவை காய்க்க ஆரம்பித்து விட்டன. காய்த்து இருந்தவை
பழுக்க ஆரம்பித்து விட்டன.

முளை விடுவதை,கிளை வருவதை,நுனி வளர்வதை,
நீருற்றி உரமேற்றி உபசரிப்பு கொடிப் படர பந்தல்
நுனி தொடர கொம்பு உன்னிப்பான கவனிப்பு.

காட்டுகிற கரிசனம் எல்லாம்அறுவடைக்காக தான்.
வளர்கிற செடி கொடிகளுக்குதெரியாவிட்டாலும்
வளர்க்கிற நமக்கு தெரிந்து தானே இருக்கிறது..,

# இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋 $

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top