புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்குள் பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
கல்லாக்கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார்.
மேலும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தி லிருந்து ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் கல்லாக்கோட்டை பாய்காரர் தெருவிற்கு புதிய சாலை அமைக்கும் பணியையும் எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.