புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது.
வாலிபர் சங்கத்தின் திருவரங்குளம் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் தலைமை வகித்தார். விழாவில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளான பழ.குமரேசன்-சரண்யா, எஸ்.செந்தில்குமார்-மாலதி, எஸ்.ஜனார்த்தனன்-ஷீபா, சாக்கியபிரபு-இந்துமதி, சி.அன்புமணவாளன்-சலோமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர் செல்வம், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன், திருச்செல்வம், ரமா ராமநாதன், திருச்செல்வம், ரெங்கநாதன் உள்ளிட்டோர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாராட்டி பேசினர்.
பட்டி மன்றம்.
பாராட்டு விழாவிற்குப் பின்னர் கவிஞர் நந்தலாலா தலைமையில் எஸ்.பி.பாஸ்கர், இரா.தனிக்கொடி, கிலோனாமணிமொழி, அன்னலெட்சுமி ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக மாணவிகளின் நடனநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.