மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியக்குழு சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு குன்றாண்டார்கோவில் நால்ரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். ‘சோசலிசமே மாற்று’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., ‘நாம் கம்யூனிஸ்ட் என்பதில் பொருமைகொள்வோம்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ‘கிளைக்கூட்டம் ஏன்? எப்ப?’ என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினரும், பேரூராட்சிமனற் உறுப்பினருமான எம்.மகாலெட்சுமி நன்றி கூறி;னார். பயிற்சி வகுப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.