Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

சுதந்திர நாள்.. மாநில விநாடி-வினா போட்டிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விநாடி-வினா போட்டிகள்

புதுக்கோட்டையில் மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை 76 -ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு  தமிழ்நாடு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி- வினா போட்டி மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில்  அலுவலர் மன்றத்தின் வளாகத்தில்  நடைபெற உள்ளது.

வினாடி வினா  போட்டி 15. 8. 2023 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு அலுவலர் மன்றத்தில்  நடக்க இருக்கிறது . இப்போட்டியில் கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம் .   இதில் பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் கிடையாது.

பரிசுகள் முதல் பரிசு ரூபாய் 2000 -மும்  இரண்டாம் பரிசு 1500 -மும்  மூன்றாம் பரிசு ரூ. 1000  வழங்கப்படும். இப்போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவ, மாணவிகள்,  செயலர், அலுவலர் மன்றம், பழைய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை  622 001 -என்ற முகவரி அல்லது  lecganesan@yahoo.co.in  இணையதள முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். மேலும், பேராசிரியர் கணேசன்-  9786382393 செல்பேசியில்   தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top