Close
நவம்பர் 25, 2024 11:39 மணி

எம்எல்ஏ பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி முயற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்யும் முயற்சி நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த வை. முத்துராஜா. மருத்துவரான இவர் சமூக ஊடகங்களிலும் தீவிரமாக இயங்குபவர்.
இவரது பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய சில மர்ம நபர்கள், வியாழக்கிழமை அவரது நண்பர்கள் சிலருக்கு மெசஞ்சரில் சென்று பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
போலிக் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் மோசடி செய்ய முயற்சிக்கும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top