Close
நவம்பர் 22, 2024 8:45 காலை

இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி, தொழில் முனைவோர் திட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் தொழில் முனைவோர் திட்டம்

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:  இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்.பராம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது.

கிராமப் புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதி யிலேயே ஆரம்பித்தல்.  வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல்.

2023-2024-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல்.கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல். இப்பயிற்சி யின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல். பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:  18 முதல் 35 வயது வரை.கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்தி ருக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதி யுள்ள விண்ணப்பதாரர்கள்கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திடவேண்டும்.www.loomworld.in(அல்லது)

இது தொடர்பாக 11.09.2023 (திங்கள் கிழமை) அன்று  தஞ்சை அருகே உள்ள  (துகிலி)அம்மாப்பேட்டை கஸ்தூரி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கு மாறு வேலையில்லாத இளைஞர்,பெண்கள் ஆகியோர் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top