புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 16.09.2023 அன்று திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல் ஒன்றிய அரசின் தனித்து வம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) விண்ணப்பம் பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட பரிந்துரைகள் செய்யப்பட உள்ளது.
எனவே இதுவரை மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை பெறாத ஒன்றிய அரசின்தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறாத மற்றும் பிற மறுவாழ்வு உதவிகளான பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப
அட்டை நகல்ரூபவ் வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டியும், மேலும் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற (UDID) அட்டை முக்கியமான ஆவணமாக கருதப் படுவதால் (UDID) அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.