சிங்கப்பூர் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தர்மன் சண்முகசுந்தரத்திற்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ஆர்.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழ் வர்த்தக சங்கம் பழைமையான வர்த்தக அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் இச்சங்கத்தின் பங்கு மகத்தானது.
சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு.சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவுகள் வளர்வதோடு வர்த்தகம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருதரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.