Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட், மெடல் அறிமுகம்

ஈரோடு

ஈரோடு மாரத்தான் போட்டிக்கான டி சர்ட், பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது

ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம்

ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான டி சர்ட் மற்றும் மெடல் அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது.

விழாவில் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் தலைவர் மதுசங்கர், இயக்குனர் உசேன் மற்றும் பிரபு ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக ஒளிரும் ஈரோடு தலைவர் அக்னி ஸ்டீல்ஸ் சின்னசாமி, செயலாளர் கணேசன், கண்ணன், விமலாகேர் டென்டல் மருத்துவமனை மருத்துவர் உமாசங்கர், இந்து கல்வி நிலையங்களின் நிர்வாக இயக்குனர் கே.கே.பி.அருண்,

வி.வி.நேஷனல் பிளாஸ்டிக்ஸ் செந்தில்நாதன், பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஈரோடு மாரத்தான்-2023 போட்டியில் பங்கேற்கும் வீரர்க ளுக்கான டி-சர்ட் மற்றும் வெற்றி பெறுபவர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

ஈரோடு மாரத்தான் போட்டி குறித்து ஈரோடு ரன்னர்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,

ஈரோடு மாநகராட்சியின் தூய்மையை பராமரிப்பு தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஈரோடு மாநகராட்சி, ஒளிரும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து “ஈரோடு மாரத்தான் 2023” போட்டியை வரும் அக்டோபர் 15 -ஆம் தேதி நடத்த உள்ளோம். கடந்த 2016 -ஆம் ஆண்டு 10 நபர்களுடன் சிறிய குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஈரோடு ரன்னர்ஸ் கிளப் தற்போது 200க்கும் மேற்பட்ட ரன்னர்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

மன அமைதி, ஆரோக்கியம் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதே மராத்தான் ஓட்டத்தின் நோக்கமாகும்.கடந்த ஒரு ஆண்டில் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு வகை மாரத்தான் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாரத்தான் போட்டி டிசர்ட், பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது

குறிப்பாக சென்னை மாரத்தான், கொச்சி மராத்தான், ஹைதராபாத் மாரத்தான், டாட்டா- மும்பை மராத்தான், பெங்களூர் டிசிஎஸ் மாரத்தான், ஏற்காடு அல்ட்ரா மராத்தான் ஊட்டி அல்ட்ரா மாரத்தான் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

மாரத்தான் என்பது 42.195 கி.மீ. தூரத்தையும் அரை மராத்தான் என்பது 21.1 கி.மீ., தூரத்தையும் அல்ட்ரா மராத்தான் என்பது காடு, மலை பிரதேசங்களில் நடைபெறும் நீண்ட தூர ஓட்டமும் ஆகும்.அந்த வகையில், இம்மாதம் 10 -ஆம் தேதி உலகின் மிக உயரமான இடமான காஷ்மீரின் லடாக் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர் கள் 9 பேர் கலந்து கொண்டு முழுமையான தூரத்தையும் ஓடி கடந்துள்ளனர்.

ஈரோடு
மாரத்தான் டி-சர்ட், பதக்கம்

இந்த ஆண்டு அக்டோபர் 15 -ஆம் தேதி ஈரோடு ரங்கம்பாளை யம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., ஆகிய மூன்று பிரிவுகளாக மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க இதுவரை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3,000 -க்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நாள் முதலாகவே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மராத்தான் வீரர்களும் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

“ஈரோடு மராத்தான்-2023” போட்டியில் பங்கேற்க விரும்பு வோர் www.erodemarathon.com என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய செப்டம்பர் 30 -ஆம் தேதி கடைசி தேதி  என்று தெரிவித்தனர்.

# செய்தி:ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top