Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப் 25 ல் வேலை நிறுத்தம்

ஈரோடு

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், கோவிந்தராஜன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்  செப். 25 -ஆம் தேதி (திங்கள்கிழமை)  உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான கார்த்திகேயன், கோவிந்தராஜன் சனிக்கிழமை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து விடுபடுவ தற்காக ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தினோம்.

ஏற்கனவே ஒரு கிலோ வாட்டுக்கான கட்டணம் ரூ.35 -ல் இருந்து ரூ.154 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்பு கால கட்டணமும் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் கட்டண உயர்வினால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். இதனால், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும்.

3 பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்டண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிஃப் ( பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

எல்டி கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4 -ஆம் கட்டமாக வரும் 25 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 3.37 லட்சம் நிறுவனங்களும், ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழில் நிறுவனங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கிறோம்.  எங்களது இந்த போராட் டத்தின் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிற்கு உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top