Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை

ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் பேசுகிறார், மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி .

 அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 – ஐ தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை 7-ஆவது மாவட்டப் பேரவைக்கூட்டம் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார்.

பெ.மணிவண்ணன் வரவேற்றார். பி.பிரபாகரன் அஞ்சலித் தீர்மானம் வாசித்தார். பேரவையைத் தொடங்கி வைத்து காப்பீட்டுக்கழக ஓய்வூதியர் சங்க கோட்டத் துணைத் தலைவர் மு.அசோகன் உரையாற்றினார்.

செயலாளர் ம.வெள்ளைச்சாமி, பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில மாநாடு என்ற தலைப்பில் ஆர்.சுப்பிரமணியன், எதிர்காலக் கடமைகள் என்ற தலைப்பில் இரா.இராஜேந்திரசிங், சங்க அமைப்பு என்ற தலைப்பில் அ.மணவாளன், ஓய்வூதியர் பத்திரிகை என்ற தலைப்பில் நீல.இராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். தோழமைச் சங்க நிர்வாகிகள் எஸ்.ஜபருல்லா, சண்முகம், சரவணன், இளங்கோவன், ஆவுடைமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

புதுக்கோட்டை
பேரவையில் கலந்துகொண்டவர்கள்.

பேரவையில் கலந்துகொண்டு மாவட்ட கருவூல அலுவலர் செ.இராஜலெட்சுமி சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் எம்.நாதன் நிறைவுரையாற்றினார்;. ஜி.முத்துச்சாமி, கே.ராஜமாணிக்கம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். எம்.வேலாயுதம் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். 70 வயது பூர்த்திய டைந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தினை ஏற்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். குறைபாடுகளை நீக்கி புதிய காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். குரும்பூரில் இயங்கி வந்த பாரி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிஎஸ்என்எல் டவர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தர்வ கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீரமானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top