Close
அக்டோபர் 6, 2024 2:27 மணி

ஈரோடு நந்தா பல் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு

ஈரோடு நந்தா பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன், உறுப்பினர் பானுமதி சண்முகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி முதலாமாண்டு வகுப்பை தொடக்கி வைத்தார்.

விழாவில் அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் பேசியதாவது: நந்தா கல்வி நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளாக கல்வி பணியில் திறம்பட செயல்பட்டு வருகிறது.

தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இங்கு பயிலும் மாணவர்களின் திறன்களை செயல்முறை அடிப்படையில் ஊக்கப்படுத்தும் விதமாக ஈரோட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிறைய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

புறநோயாளிகளுக்கு பயிற்சி பெற்ற மாணவர்களே சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய சிகிச்சையகம் அமைக்கப்பட்டுள்ளதையும், சிகிச்சை காலங்களில் பல் கட்டுதல், பல் வேர் சிகிச்சை, ஈறு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இலவசமாக சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 9 ஆயிரம் புறநோயாளிகள் பயன் அடைந்துள்ளனர், என்றார்.

விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம், நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புலமுதல்வர் மருத்துவர் சந்திரபோஸ், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நந்தா பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ராஜ்திலக் வரவேற்றார். விழாவின் நிறைவாக பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் மருத்துவர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top