Close
நவம்பர் 22, 2024 5:42 காலை

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினர்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து  ஈரோட்டில்  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், தமிழ்நாட்டுக்கான உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய பாஜக அரசையும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த தவறிய ஆளும் திமுக அரசையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்விற்கு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.கி.சீதாலட்சுமி, மு.சத்யா,ஈரோடு மண்டல செயலாளர் நவநீதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, விவசாயிகள் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி பேசும் போது,தமிழ கத்தின் ஆளும் திமுக அரசால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி , ஆளுகின்ற அரசு விவசாயிகளின் நலனை சிந்திக்காமல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகிறது.

ஈரோடு

மேலும் விவசாயிகள் தங்களது கடமையை செய்ய தவறினால் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top