Close
செப்டம்பர் 20, 2024 8:58 காலை

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தால் மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

ஈரோடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மாநிலங்களின் மக்கள் பிரச்னையைத் தீர்க்காமல் மக்களுக்கிடையை மோதல் போக்கை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் பி.எஸ்.சுந்தர்ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் டி.சி.தங்கதுரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை கண.குறிஞ்சி, தற்சார்பு விவசாயிகள்சங்கஒருங்கிணைப்பாளர்கி.வெ.பொன்னையன், நிலவன், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின், முருகன், வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கமல்ஹாசன்.

விஜயகுமார், ஞானசேகர், சுரேஷ், ராஜேந்திரன், செந்தில்குமார், ரமேஷ், உதயநிதி, ஜோதி, ஆனந்தன், சாதிக்பாட்ஷா, பிரேம்குமார்,காதர்அலி என்கிற பாபு, கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன், பாலசுப்பிரமணியம், பொன் பூபதி, ரவி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மாவட்டத் தலைவர் ஆர்.கே.சண்முகவேல், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது:

ஈரோடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்து கர்நாடக அரசு அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதுடன், மாநிலங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் மாநில நலன்களை கண்டு கொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்படுவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காவிரியில் தண்ணீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில்
உள்ள விளை நிலங்கள் காய்கிறது. தண்ணீர் திறக்க மறுப்ப துடன், கர்நாடக- தமிழக எல்லையிலும், கர்நாடகத்திலும் தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கியும் அடாவடியில் ஈடுபடுகின்றனர்.

உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தர விட்டும் கர்நாடக அரசு தீர்ப்பை மதிக்காமல் மோதல் போக்கில் ஈடுபட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இப்பிரச்னையில் உரிய தீர்வு காணாவிட்டால் கர்நாடக அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.

# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top