Close
அக்டோபர் 6, 2024 1:26 மணி

பெருந்துறை கொங்கு நேச்ரோபதி மருத்துவக் கல்லூரியில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவு

ஈரோடு

பெருந்துறையில் நடைபெற்ற தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கொங்கு இயற்கை (நேச்ரோபதி) மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகளின் தொடக்க விழா

ஈரோடு, பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட உள்ளதாக கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கொங்கு இயற்கை (நேச்ரோபதி) மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகளின்  தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தாளாளர் வெங்கடாசலம் வரவேற்றார். அறக்கட்டளையின் உறுப்பினரும், முன்னாள் தாளாளருமான பி.சி.பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:

கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியை முதன்முதலாக தொடங்கிய முதல் ஆண்டிலேயே 74 மாணவர்கள் ஆர்வத்துடன் இயற்கை மற்றும் யோகா கல்விக்கான படிப்பில் சேர்ந்தனர். அதற்கு கொங்கு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரி என்றாலே தரம்நிறைந்த கல்வியை வழங்குவார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருப்பது தான்.

நம்முடன் மருத்துவக் கல்லூரியை தொடங்கிய பிற மருத்து வக் கல்லூரிகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது, நம்முடைய கல்லூரியின் மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்ட புறநோயா ளிகள் வருகை தருவது மக்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றி வருகிறோம் என்பது தான் அர்த்தம்.

முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களாகிய நீங்கள் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.  நல்ல நண்பர்கள் உடன் இருந்தால் நல்ல பழக்கங்கள் உங்களுடன் இருக்கும். இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக முடியும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலரால் நமக்கு அருளப்பட்டதே இயற்கை மருத்துவம். திருமூலர் எழுதிய பாடல்களில் குழந்தை பிறப்பது முதல் கடைசி காலம் வரையிலும் பின்பற்ற வேண்டிய இயற்கை மருத்துவம் குறித்து பாடல்கள் மூலம் பாடப்பட்டுள்ளது. இதேபோல தேவாரப் பாடலிலும் இயற்கை மருத்துவம் குறித்து பாடப்பட்டுள்ளது.

நம்முடைய அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் விரைவில் இயற்கை மருத்துவம் சார்ந்த கல்லூரியை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.

அறக்கட்டளை தலைவர் டாக்டர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, கொங்கு கலை கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா,

அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.கே.முத்துசாமி, சச்சிதானந்தம், கார்த்திகேயன் மற்றும் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மருதராஜ்,  கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரதாப்சிங் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

புனே தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர் யுவராஜ், இயற்கை மருத்துவச்சின் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும், தேசிய அளவில் இயற்கை மருத்துவர்களின் தேவைகள் குறித்தும் பேசினார்.

சிறப்பு விருந்தினர் மருத்துவர் பி.எஸ்.நிவேதா, பிராணயாமம், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்ற இயற்கை மற்றும் யோகா மருத்துவம் மூலம் பல்வேறு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரியின் மாணவர்கள் திரணிஷா, அனுமாலிகா ஆகியோருக்கு தங்கநாணயங்களை கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், அறக்கட்டளை உறுப்பினர் பி.சி.பழனிசாமி வழங்கினர்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வகுப்பு வாரியாக பல்கலைக் கழகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 5 மாணவர்களை தேர்வு  செய்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில், 100 படுக்கை வசதிகளுடன் கூடி உள்நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட உள்ளதாக கல்லூரித் தாளாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top