Close
நவம்பர் 25, 2024 4:12 காலை

ராகுலை இராவணனாக சித்தரித்த பாஜகவினரைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தியை கேலிச்சித்திரம் வரைந்து கடும் விமர்சனம் செய்ததாக பாஜக வினரையும் மத்திய அரசையும் கண்டித்து ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யை 10 தலை ராவணனாக சித்தரித்து கருத்து படம் ஒன்றை பாஜகவினர் வெளியிட்டு இருந்தனர் இதற்கு நாடு முழுவதும் காங்கிரசார் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் பாஜகவினரை கண்டித்து போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர்கள் பி.பெ. அக்ரஹாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம் ஜவஹர் அலி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே. என். பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத் ஆகியோர் முன்னிலையில் நடந்த  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருசெல்வம் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது கண்டன சிறப்புரையாற்றினார்.

ஈரோடு
ஈரோட்டில் பாஜவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

இதில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் பி ஏ பெரியசாமி, இரண்டாம் மண்டல தலைவர் ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர்களான டி.கண்ணப்பன், இரா. கனகராஜன்,ஈரோடு மாவட்டம் மாணவர் காங்கிரஸ் தலைவர் ஆரிப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஓ பி சி பிரிவின் தலைவர் சித்தோடு ஆர் பிரபு.

தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டி யு) மாநில துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், மாவட்ட எஸ் சி பிரிவு முன்னாள் தலைவர் கே பி சின்னசாமி, பெருந்துறை சார்ந்த சிறுபான்மை துறை நிர்வாகி யாசர் அரஃபாத், முன்னாள் ஈரோடு வட்டாரத் தலைவர் நசியனூர் நடராஜ், என் சி சுப்பிரமணியம்,வாட்டர் சிவாஜி, ராஜாஜிபுரம் குமரேசன், யோகேஷ், ஜே சதீஷ்,மரப்பாலம் அயூப் கான், கனி ராவுத்தர் குளம் சபீர் அகமது.

மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளான ஸ்ரீதர், நவீன்,மாலிக்,ஷாஹித் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளான கஸ்தூரி குமார், ஆயிஷா சித்திக்கா, ஜாஸ்மின், பர்வீன், பானு,ராபியா,ஆதிலா, பாத்திமா, முருகேஸ்வரி புஷ்பா, சாருலதா, ஜெகதீஸ்வரி, சாந்தி மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டு பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பாஜக அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற காங்கிரசார் கைது

பத்து தலை ராவணனாக ராகுல் காந்தியை சித்தரித்த பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்து,ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை இடும் போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு பாஜகவினரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஈரோடு மூலப்பாளையத்தில் இருந்து 46 புதூர் சாலையில் அமைந்துள்ள ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top