Close
நவம்பர் 21, 2024 11:29 மணி

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

ஈரோடு

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்கக் கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றி வைத்து கண்டனம் தெரிவித்ததுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.

தொழிற்சாலைகளுக்கும், பல்வேறு தொழில் நிறுவனங்க ளுக்கும் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்க கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கடந்த மாதத்தில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (ஈடிஷியா) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை
ஈரோட்டில் ஆட்சியரிடம் மனு அளித்த ஃபேட்டியா, ஈடிசியா நிர்வாகிகள்

போராட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

பரபரப்பு நேர(பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப்பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். “மல்டி இயர் டேரிப்” -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நிர்வாகிகள் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.

முன்னதாக ஈரோடு சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங் கில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபேட்டியா) தலைவர் வி கே ராஜமாணிக்கம் தலைமையில் , பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதே போல ஈடிசியா நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கருப்பு பட்டை அணிந்து ஊர் மூலமாக வந்து தனித்தனியே மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top