Close
டிசம்பர் 3, 2024 6:31 மணி

அரசு ஐடிஐ -ல் இளைஞர் சேவை சங்க பணியேற்பு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ரோட்டராக்ட் சங்க பணியேற்பு விழா

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக புதுக்கோட் டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இளைஞர் சேவை சங்கம் (ரோட்டராக்ட் சங்கம்) பணியேற்பு விழா புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் செவ்வாய்க் கிழமை  நடைபெற்றது.

 அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிலையம் முதல்வர் சுந்தர கணபதி, துணை ஆளுநர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரோட்டரி பிரார்த்தனை செயலாளர் முத்தன் அரசகுமார் வழங்கினார் இளைஞர் சேவை சங்க சேவை தலைவராக மரியஜெரால்டு, செயலாளராக ஜெகநாதன், பொருளாளராக செல்வகுமார் ஆகியோருக்கு மாவட்ட ரோட்டராக்ட் கமிட்டி தலைவர் சண்முகவேல் பணி ஏற்பு செய்து வைத்து வாழ்த்தினார்.

புதுக்கோட்டை
அரசு ஐடிஐ -ல் நடந்த ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு விழா

குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். அழகப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில்  பேசியதாவது:

கடலின் ஆழத்தை அறிந்தாலும், மனத்தின் ஆழத்தை அறிய முடியாது என்பார்கள். அது எத்தனை உண்மை! மற்றவர்களின் மனத்தை அறிய முற்படும் நாம், முதலில் நம் மனத்தைப் பற்றித் தெரிந்திருத்தல் வேண்டும்.

ஒருவரது மனத்தைக் கணிப்பது என்பது, அத்துணை எளிதான காரியம் அல்ல. ஆயினும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றும், உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் என்றும் கூறுகிறோம். காரணம் நம் மனம் பல வழிகளில் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

எண்ணம், சிந்தனை இவற்றை நமது செய்கைகள், நடத்தைகள் காட்டி விடுகின்றன. இந்த உள் மனத்தின் பிரதிபலிப்பு தான் நமது வெளிப்புற நடத்தைகள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், பார்த்ததுமே நெற்றியை சுளித்து கொள்ளுதல் என்பது உள் மனத்தின் பிரதிபலிப்பு.

தன்னைத் தானே எடை (உள்ள எடை) போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் துல்லியமான அளவுகோல் என்று எதுவும் கிடையாது. தன்னைக் குறைவாக எடைபோட்டுக் கொள்பவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்களா கின்றனர்.

மிக அதிகமாக எடைபோட்டு கொள்பவர்கள், மிகையான மனப்பான்மை உடையவர்களாகின்றனர். இதில் இரண்டுமே தவறுதான். வயதானவர்களுக்குத் தர வேண்டியது மரியாதையும், அன்பும், கனிவான பேச்சும் மட்டுமே.

தோல்வியைத் தவிர்க்கவும், தொடர்ந்து வெற்றியடையவும், நாட்டில் – வீட்டில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிலைநாட்டவும் நம்மை நாமே அறிதல், தன்னைத்தானே நம்புதல் மிக மிக அவசியம் என்றார் அவர்.

மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி சுனில் கௌதம்ராஜ், ரோட்டராக்ட் மண்டல பிரதிநிதி ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் பின் அணிவித்து சான்றிதழ் வழங்கி சங்கத்தில் இணைத்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர்களாக கோமதி சங்கர், ஸ்ரீதர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மேனாள் தலைவர் சிவக்குமார், தங்கராஜா, சேதுகார்த்திகேயன், பாரூக்ஜெய்லானி, இளங்கோவன், செல்வகுமார், சேகர் ஆசிரியர்கள் மாணவர்கள்   கலந்து கொண்டனர்.

இளைஞர் சேவை பணியேற்பு விழாவில் இளைஞர் சேவை சங்க தலைவர் மரிய ஜெரால்டு தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். நிறைவாக பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top