Close
மே 11, 2024 7:13 காலை

கவிதைப் பக்கம்… தைத்திருநாள்… டாக்டர் மு. பெரியசாமி..

புதுக்கோட்டை

கவிதைப்பக்கம்- தைப்பொங்கல்

தைத்திருநாள்

அதிகாலை நேரத்தில்
குயில்கள்
ஆலாபனை பாடிட
ஆழ்கடலில் நீராடி
ஆதவன் – வானில்
அழகு நடை போட்டிட

ஊண் இல்லா
பெரு வாழ்வை
உலக மக்கள் நாடிட
தேனினும் இனிய
தெள்ளு தமிழ் பாடிட

விளைந்த
புது நெல்லு
வீடு வந்துசேர்திட
வெண்ணிற மேகமெல்லாம்
வீதி வழி போயிட

வாழைமரம் குலை தள்ளி
வளம் சொல்லி நின்றிட
வரப்பு ஓரம்
நாணல்கள் கூட்டம்
வாஞ்சையோடு சிரித்திட

அரசு, அரிசி சர்க்கரையோடு
ஆயிரமும் அள்ளிக்கொடுத்திட
உழவர் நெஞ்சங்களில்
உவகை பெருகி நின்றிட

களிமண்ணில்
செய்த பானை
கனல் பட்டு பொங்கிட
கரும்பும் மஞ்சளும் சேர்ந்து
கதிரவனை போற்றிட

இசை சங்கமித்து
ஏழு சுரங்கள் இசைத்திட
இளம் காலையில்…….
தை
இனிமையுடன் பிறக்கும்
எண்ணியது எல்லாம்
இனி
எண்ணியபடியே நடக்கும் !!

##மரு.மு.பெரியசாமி- புதுக்கோட்டை ##

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top