இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற மலைப்பாங் கான நகரத்தில் லியோ கதை தொடங்குகிறது. நாயகன் பார்த்திபன் (விஜய்) ஒரு விலங்குகள் மீட்பாளர் மற்றும் காபி கடை உரிமையாளர், அவரது மனைவி சத்யா (த்ரிஷா) மற்றும் அவர்களது குழந்தைகள் ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கின்றனர். அவரது காபி ஷாப்பில் நடந்த ஒரு திருட்டு சம்பவம், ஐந்து ஆபத்தான பணம் பறிக்கும் மனிதர்களை சுட்டுக் கொல்லும் படி தூண்டுகிறது.
இந்த வழக்கு பிரபலமடைந்து செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பார்த்திபன் வெளியுலகிற்கு தெரிய வருகிறார்.
இந்த வெளிப்பாடு அவருக்கு மேலும் பல பிரச்னைகளை கொண்டு வருகிறது. மோசமான கேங்க்ஸ்டர்களான ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்) மற்றும் அவரது சகோதரர் ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) இருவரும் இந்த செய்தியை அறிந்து ,பார்த்திபனை லியோ தாஸ் (விஜய்) என்று நினைத்து பின் தொடர்கின்றனர்.
தெற்கிலிருந்து பல கும்பல்கள் ஹிமாச்சலப் பிரதேசத்தை நோக்கிச் செல்கின்றன. லியோவுக்கும் பார்த்திபனுக்கும் என்ன தொடர்பு? ஹரோல்ட் மற்றும் ஆண்டனி யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தான் லியோவின் கதையை நகர்த்திச் செல்கின்றன.
விஜய் தனது வழக்கமான மாஸ் ரோலில் இருந்து மாறுபட்ட கேரக்டரில் தனது பாத்திரத்தை சிரமமின்றி நடித்திருக்கிறார். பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஒரு டைம் பாம் போல
எந்த நேரத்தில் வெடிக்கப் போகிறார் என்ற பதற்றத்தை தூண்டுவதில் வெற்றியடைத்திருக்கிறது அவரது அடக்கமான நடவடிக்கைகள். அமைதியாகத் தெரிகிற விஜய் தனது குடும்பம் பிரச்சனையில் இருக்கும் போது மூர்க்கமாக மாறுகிறார்.
அவரது குணாதிசயங்கள் நம்பிக்கைக்குரியதாகத் தொடங் கினாலும், லியோ அவரது வாழ்க்கையில் மற்றொரு எதிர்மறை பாத்திரமாக மாறுகிறார். படத்தில் காட்டப்படும் இரு வேறு மாறுபட்ட அவரது ஒட்டுமொத்த செயல்திறன் குறைபாடற்றது.
முதல் பாதியில் பூசி மெழுகிய புஷ்டியான பாத்திரத்துடன் த்ரிஷா போதுமான திரை நேரத்தைப் பெற்று, திரையில் தனது பாத்திரத்தை அழகாக பதிவு செய்துள்ளார். ஆனால் பிற்பகுதியில் அதிக நேரம் காணவில்லை.
இரக்கமில்லாத கொலையாளியாக, சாண்டி மாஸ்டர் ஒரு மனநோய் நடத்தை கொண்ட பாத்திரத்தில் தனது முத்திரையை பதித்து ஒரு அடையாளத்தை விட்டுச் செல்கிறார்.
அந்தோணி தாஸாக சஞ்சய் தத்தும், ஹரோல்ட் தாஸாக அர்ஜுனும் கொடுக்கப்பட்ட வேலைக்கு கனகச்சிதமாக பொருந்தி போகிறார்கள். தங்களின் இருப்பை, திரையில் தெரியும் நேரங்களில் அவர்களது வேலையை செய்து அவர்களுக்கான நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்கின்றனர்.
ஹரோல்ட் தாஸாக அர்ஜுன் ஸ்டைலாக இருக்கிறார். சுருக்கமான ஃப்ளாஷ்பேக் காரணமாக, லியோ மற்றும் ஹரோல்டுக்கு இடையேயான இணைப்பு சரியாகக் காட்டப்படவில்லை. க்ளைமாக்ஸிலும் அர்ஜுன் தன் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் இஸ் லுக்கிங் வெரி ஸ்மார்ட். கௌதம் மேனன் ஒரு நல்ல காவலராக முக்கியத்துவம் பெறுகிறார். அவரது மனைவியாக வரும் ப்ரியா ஆனந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரின் பாத்திரங்களும் அப்படித்தான்.
ஜார்ஜ் மரியான் நெப்போலியன் குறைந்தபட்ச இருப்புடன் மகிழ்விக்கிறார். அவர் ‘கைதி’ திரைப்படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியன் என்ற கேரக்டரின் அடையாளத்துடன் வருவதாலும், இறுதியில் விக்ரம் நாயகன் உரையாடலும் கைதி, விக்ரம் மற்றும் லியோவுக்கு இடையே வெளிப்படையான ஒப்பீடு மற்றும் ஒத்திசைவு தெரிகிறது.
ஆக இது LCU ல் இணைக்கப்பட்ட படைப்பு என அறிய முடிகிறது. LCU – இப்படியான சொல்லாடல் நமக்கு புதிது. அதை இதில் சேர்க்கலாம், இதை அதில் சேர்க்கலாம் என்கிற லோகேஷூக்கான காக்டெயில் வசதி எனலாம்.
புதுமையான யோசனைகளுடன் கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லியோவையும் அதே தரத்துடன் படைக்க வேண்டும் என்கிற பெரும் பொறுப்பு மற்றும் சுமை லோகேஷ் கனகராஜ் தலையில் ஏற்றப்பட்டு விட்டது. அதை மனதில் வைத்து உழைத்திருக்கிறார். முதல் பாதியின் காட்சிகள் மற்றும் திரைக்கதையை பார்ப்பது ஒரு விருந்தாகும்.
படம் முதல் பாதியில் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டா லும், பிற்பாதியில் சரியாக எழுதப்படாத பின்னணிக் கதை யால் சிறு தொய்வுடன் நகர்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஆக்சன் படங்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டும் இந்தத் திரைப்படம் தொழில் நுட்ப ரீதியாக மிகவும் வலிமையானது.
அனிருத் சர்வதேச தரத்திற்கான மதிப்பெண்ணைக் கோரும் விதமாக மீண்டும் களமிறங்கி உள்ளார். ஸ்டண்ட் இயக்குநர் களான அன்பறிவ் மற்றும் வி எஃப் எக்ஸ் கலைஞர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள்.
படம் முழுக்க லோகேஷ் கனகராஜின் முத்திரையை பதித்து, அதை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸுடன் சுவாரஸ்யமாக இணைத்துள்ளார்.மொத்தத்தில் ஒட்டுமொத்த தியேட்டரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனலாம்.
தமிழ் சினிமாவின் சாளரம், விசாலமாக திறந்து விடப்பட்டி ருக்கிறது. படைப்பாளிகளின் கருத்தாக்கமும்,பார்வையாளர் களின் பார்வையும், ரசிகனின் ரசனையும், வீரியமான வீச்சிற்கு இழுத்து செல்லப்பட்டிருப்பதன் மூலம்,தமிழ் திரை சூழல் ஆரோக்கியமானதாக இருப்பதாக ஆணித்தரமாய் அடித்து சொல்லலாம்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #