Close
நவம்பர் 22, 2024 2:25 காலை

ஈரோட்டில் சுகாதார நடைபாதை திட்டம் தொடக்கம்

ஈரோடு

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை தொடக்கி வைத்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் “நடப்போம்… நலம் பெறுவோம்” என்ற பெயரில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு  சுகாதார நடைபாதை என்னும் ஹெல்த் வாக் திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடைபாதை திட்டத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும் தொடக்கி வைக்கப்பட்டது.

ஈரோட்டில்  கனி ராவுத்தர் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் அம்மன் நகர், செந்தில் நகர் வழியாக ரோஜா நகர் வரையிலும் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் ஊர்வலமாக சென்று நடை பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற நடப்போம் நலம்பெறுவோம் நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்

இதில்,  மாநகராட்சி ஆணையர் சிவ. கிருஷ்ணமூர்த்தி,  மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் பி.கே.பழனிசாமி, காட்டு சுப்பு, சசிகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஈ.பி.ரவி,

ஆதி ஸ்ரீதர், ஜெகதீஷ், ஜெகநாதன், செந்தில், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், ஏடிஎஸ்பி. ராஜேந்திரன், அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடைபயணத்தில் பங்கேற்றவர்களுக்கு சித்த மருத்துவத் துறை சார்பில் செம்பருத்தி பூ, ஆவாரம்பூ சாறு, நன்னாரி சாறு இலவசமாக வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top