Close
செப்டம்பர் 20, 2024 6:34 காலை

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு திமுக பிரமுகர் பாராட்டு

ஈரோடு

மாணவி கவுசிகா வட்டு எறிதல் போட்டியில் முதல் இடம் பிடித்து பதக்கம் வென்ற மாணவியை பாராட்டிய திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி .

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி கௌசிகாவுக்கு திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான 64 – வது குடியரசு தின தடகள போட்டி செங்கல்பட்டில் நடந்தது.

இதில், 100, 200, 400, 800 மீ., ஓட்டம், 3,000, 5,000 மீட்டர் என தொலை துார ஓட்டம், ஈட்டி, குண்டு, வட்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல், குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன.

போட்டியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 38 மாவட்டங்களைச் சேர்ந்த, 7,000 வீரர் — வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி கவுசிகா வட்டு எறிதல் போட்டியில் முதல் இடம் பிடித்து பதக்கம் மற்றும் சான்றிதழ்  பெற்றார்.  இந்த மாணவியை திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி பாராட்டு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top