Close
நவம்பர் 21, 2024 11:42 மணி

தமிழகத்தில் பாஜகவினர் ஆட்சிக்கு வருவார்களா ? என்று பார்ப்போம்… அமைச்சர் சு.முத்துசாமி கிண்டல்..

ஈரோடு

தமிழக வீட்டு வசதி வாரிய மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வாழ்த்தி பேசினார்.

தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு மணல்மேடு தெற்கு மாவட்ட திமுக அலுவல கத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

மாநாட்டில் மாணவரணி மாநில நிர்வாகி வீரமணி ஜெயகுமார் வரவேற்றார். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.ஈ. பிரகாஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் பி.கே. பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.தமிழக வீட்டு வசதி வாரிய மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வாழ்த்தி பேசினார்.

பின்னர் அமைச்சர் சு முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலைஞர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமின்றி அவரது அரசின் சாதனை களையும் அவர் ஆற்றிய மக்கள் தொண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கத்திற் காகவே மாணவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில் மூலமாக மாணவ மாணவியர்கள் திராவிட இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற வைப்பதுடன் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதே இந்த போட்டிகளின் நோக்கம்.

வரும் 23 -ஆம் தேதி கலைஞரின் பேனா வடிவிலான ஒரு பிரமாண்டமான வாகனம் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. இந்த வாகனம் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தப்படும். அந்த வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பேனாவுக்குள் சென்றால் பல்வேறு புகைப்படங்களின் கண்காட்சியை வைக்கப்பட்டிருக்கும் அதனை மாணவர்களும் பொது மக்களும் பார்வையிடலாம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கூறுவது மிகப்பெரிய தவறு. பெரியாரின் கொள்கைகள் மக்களுக்கு பாதுகாப்பானது மட்டுமல்ல, அவர் மக்கள் மத்தியில் சமநிலையை ஏற்படுத்திய மிகப்பெரிய தலைவர். அவரது சிலையை அகற்றுவோம் என்று அவர்கள் கூறுவதில் அர்த்தம் இல்லை. முதலில் அவர்கள் ஆட்சிக்கு வருவார்களா என்றுபார்ப்போம்.

ஈரோடு
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்

அறநிலையத்துறை என்பது இந்து சமய கோவில்களை காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை. அந்தத் துறை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று கூறினால் அது சரியான கோரிக்கையாக இருக்கும் ஆனால் அந்தத் துறையையே கலைத்து விடுவோம் என்று கூறுவதை எப்படி ஏற்பது?பெரியார் சிலை மீது கை வைக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் அதேபோல நீதிமன்றமும் இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சரே திட்டவட்டமாக கூறிவிட்டார். அவருக்கு கட்சியிலும் தனிப்பட்ட முறையிலும் நிறைய நண்பர்கள் உண்டு. அவருடன் தொடர்பில் இருந்த வர்கள் வீடுகளில் சோதனை நடத்தி இருப்பது தவறான செயலாகும். அமைச்சர் வேலுவின் செயல்பாடுகள் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்துகிறது.

எனவே அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இது போன்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகளுக்கு கூட இது போன்ற நிலைமை வரக்கூடாது என்பதே என் கருத்து.

பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீர் வெளியேற்றும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரித்து வருகிறார். கழிவு நீரை வெளியேற்றும் 50 நிறுவனங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டத்தை அரசியல் ரீதியாக கொண்டு செல்ல வேண்டாம் என்பது எனது கோரிக்கை. இவ்வாறு முத்துசாமி பேசினார்.கூட்டத்தின் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#செய்தி: மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top