புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, முருகப்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும் , போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சந்நிதி முன்பு எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு சூரசம்ஹார லீலை சிறப்பாக நடைபெற்றது
நிகழ்வில், அசுரனான பத்மாசூரன் சிங்கமுகமாகவும் , ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான சம்ஹாரம் செய்த நிகழ்வை அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கிட தரிசனம் செய்தனர் .