புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் சமூக சேவைக்கு மாநில சங்கம் விருதுகள் வழங்கி பாராட்டியது.
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க சமூக சேவைகளை சிறப்பாக செய்ததை பாராட்டி ஈரோட்டில் தமிழ்நாடு இந்திய மருத்துவ மாநிலக் கிளை சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் செயல்திறன் 2023 விருதுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கம் ராராபுரம் கிராமத்தில் மக்கள் நாடி மருத்துவர் சேவையினை சிறப்பாக செய்ததை பாராட்டியும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை பல்வேறு சமூக சேவைகளை செய்தமைக்கும், சிறந்த தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, சிறந்த செயலாளர் டாக்டர் முகமது சுல்தான் ஆகியோரை பாராட்டி, தமிழ்நாடு மாநில சங்கத் தலைவர் செந்தமிழ்பாரி முன்மாதிரியான செயல்திறன் 2023 வ விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள் நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் டாக்டர் நவரத்தினசாமி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ்குமார், ஆலங்குடி டாக்டர் முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விருதுகள் பெற்றவர்களை புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்க அனைத்து மருத்துவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தினர்.