புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை மும்முரம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) மார்கழி மாத பிறக்கவுள்ளதை யொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் சந்நிதி வீதியில் ஜி. டி. என். பூஜா ஸ்டோரில் பல வண்ண கோலப் பொடி விற்பனைக்கு குவிந்துள்ளது. சிவப்பு , மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு என பல்வேறு வண்ணங் களைக் கொண்ட கலர் பொடியினை பெண்கள் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக கோலப்பொடி விற்பனையும் அதிகரித்துள்ளது.