புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது நகரில் உள்ள மேல ராஜவீதி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமி அருள் பாலித்தார்.
இதேபோன்று குமரமலை பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயத்திலும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் திருகோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் மற்றும் கீழ ராஜகிரி அருகில் உள்ள சாந்தநாடு சுவாமி ஆலயத்தில் புவனேஸ்வரி அதிஷ்டானத்தில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதே போன்று கீழ ராஜ வீதியில் உள்ள மனோன்மணியம் அம்மன் ஆலயத்திலும் டாக்ஸி மார்க்கெட் எதிரே உள்ள ஆறுபடை சண்முகர் ஆலயத்திலும் பெரிய காய்கறி மார்க்கெட் தெற்கு நான்காம் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் கீழ நான்காம் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் திருக்கோயிலிலும் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு தின 2024 த்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது