Close
நவம்பர் 21, 2024 10:53 மணி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தபோது விரைவில் முதல்வர் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை, வணிகவரி மற்றும் தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில், மதுரை மாவட்ட ஆட்சியர்சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட எஸ்.பி.சிவபிரசாத், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில், இந்த ஜல்லிக்கட்டு மைதானம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, மிக விரைவில் ஜல்லிகட்டு மைதான அரங்கம் திறக்கப்படும்.

அரங்கிற்கு விரைந்து வர அலங்காநல்லூர் – வாடிப்பட்டி சாலையில் இருந்து ரூ.28 கோடியில் புதிய இணைப்பு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top