Close
நவம்பர் 22, 2024 9:33 காலை

பென்னி குயூக் என்கிற தொண்டுள்ளம் படைத்த மாமனிதனின் பிறந்த நாளும் பொங்கல் திருநாளும் ஒரே நாளே..!

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பெரியாறு அணை தந்த பென்னிகுயூக் பிறந்த நாளில் இங்கிலாந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உருவச்சிலைக்கு மரியாதை செய்யும் தமிழர்கள்

முல்லைப்பெரியாறு அணை தந்த பென்னி குயூக் என்கிற தொண்டுள்ளம் படைத்த மாபெரும் மனிதனின் பிறந்த நாளும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளும் ஒரே நாள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய நிகழ்வு..

முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூறும் வகையில் கர்னல் பென்னிகுயிக் அவர்களுக்கு, லண்டனில் உள்ள ஃபிரிம்ளே பகுதியில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் மயான மைதானத்தில் அவர் பூத உடல் புதைக்கப்பட்ட கல்லறைக்கும், மதிப்புக்குரிய விஸ்வநாதன் ஐபிஏஸ் அவர்களால் நிறுவப்பட்ட மார்பளவு சிலைக்கும், தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அர்பணிக்கப்பட்டு, பென்னி குயூக் அவர்கள் இறந்த நகரமான கெம்பெர்லி நகர பூங்காவில் நிறுவப்பட்ட திருவுருவ சிலைக்கும், இன்று (15.01.2024) நானும் எனது நண்பர்களான லிங்கேஷ், சாந்தன், கோபிநாத் மற்றும் ராஜேஷ் ஆகிய ஐவரும், பூங்கொத்து வைத்து, சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால் தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

பென்னி குயூக் நாட் குறிப்பில் எழுதப்பட்டதாகக் சொல்லப் படுகிற வாசகம்.. ‘இப் புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப் புவியில் வரப்போவது இல்லை!

இன்றைய நாளில்.., நீர் இருக்கும் வரையிலும் நம் நினைவில் நிற்கும் உத்தமருக்கு உரிய மரியாதை செய்து வந்த திருப்தி யும், நெகிழ்ச்சியும் மனது முழுவதும் நிறைந்திருக்கிறது..

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top