மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள் உள்பட 48 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் மதுபாலா ஆகியோர் (15-01-24) 7 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இதில், மொத்தம் 817 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விறுவிறுப்பாக 10 சுற்றுகளுடன் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற பிடித்துள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், 9 காளைகளை அடக்கி முரளிதரன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்தம் ஜல்லிக்கட்டில் தலைமை காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 48 பேர் காயமடைந்துள்ளனர். 48 பேரில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் 19 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் இரண்டு பேர், காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒருகாரும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந் தது.
அதன்படி, சென்ற ஆண்டில் காளைகளை அடக்கி முதல்பரிசு வென்ற வீரர் கார்த்திக், நிகழ் (2024) ஆண்டிலும் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கும் அவனியாபுரத்தை சேர்ந்த ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பி.ராஜன்செல்லப்பா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை நகர காவல் துறை ஆணையர் பேராசிரியர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.