பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் தேனியில் மாபெரும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
மதுரை மண்டல மேலாளர் மதன் தலைமை வகித்தார். துணைப்பொதுமேலாளர் அமித்ரஞ்சன் முன்னிலை வகித்தார். முதன்மை மேலாளர்கள் ரெங்கராஜ், ஜெயசரவணன் ஆகியோர் வரவேற்றனர். தேனி பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், பயனாளிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சென்னை வட்டார பொதுமேலாளர் கோவிந்த் நாராயன் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கார் லோன், பல்வேறு வகையான வீட்டு லோன், தனிநபர் கடன், தொழில் கடன், விவசாயக்கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உட்பட 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.20 கோடிக்கான கடன் உத்தரவுகளை வழங்கினார்.
மேலும் 30 பயனாளிகளுக்கான வராக்கடன் தீர்வுக்கான ஒப்புதல்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார். வங்கி மூலம் கடன் பெற்றோர் தங்களது செயல்பாடுகளை குறித்து விளக்கம் அளிக்கும் அரங்குகளை அமைத்திருந்தனர்.