Close
நவம்பர் 25, 2024 5:17 காலை

இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை புதிய நிர்வாகிகளுக்கு  பாராட்டு

இந்திய மருத்துவ சங்க  புதுக்கோட்டை கிளை  நிர்வாகி களுக்கு  பாராட்டு விழா மற்றும்   புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை சாந்தி திரையரங்கம் அருகிலுள்ள எம் ஏ.கிராண்ட் விடுதியில் நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு தலைவர் வி . ராமமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சுவாமிநாதன்  முன்னிலை வகித்தார். செயலாளர் .முகமதுசுல்தான் வேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு மாநிலக் கிளை 2025 தேர்வு தலைவர் டாக்டர் செங்குட்டுவன்  கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட  புதுக்கோட்டை கிளை (2024-2025) தலைவர் டாக்டர் முகமது சுல்தான், செயலாளர் டாக்டர் ராஜா,  நிதிச் செயலாளராக டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு  பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

விழாவில்  எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் ரவிக்குமார், பொது மருத்துவம்டாக்டர் ராமநாதன் மயக்கவியல்  டாக்டர் சுரேஷ்குமார், தோல் நோய் டாக்டர் கிருஷ்ணராஜ், கண்  டாக்டர் சுப்புராமன், குழந்தைகள் டாக்டர் அப்துல் லத்தீப், காது மூக்கு தொண்டை டாக்டர் ஆறுமுகம்,

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சலீம் அப்துல் குத்தூஸ், பொதுச் செயலாளர் எம்.பெரியசாமி, செட்டிநாடு சங்க நிதி செயலாளர் நடேசன், அறந்தாங்கி சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் பழனிவேல் ராஜன் ஆகியோரது செயல்பாடுகளை பாராட்டி இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளை  (2026 தேர்வு) தலைவர் டாக்டர் ஸ்ரீதர்  கௌரவ விருதுகளை  வழங்கி வாழ்த்தினர்.

புதுக்கோட்டை
இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசுகையில்,  இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை  கிளை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது

சமூக சேவைகள் மற்றும்  மருத்துவ முகாம்கள்  நடத்தி உள்ளனர் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட வாழ்த்து வதாகவும் குறிப்பிட்டார். நிறைவாக  டாக்டர்  அகமது மர்சூக் நன்றி கூறினார். விழாவில் மூத்த  மருத்துவர்கள்  மற்றும் டாக்டர் காதர்சாகிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top