Close
அக்டோபர் 5, 2024 10:30 மணி

ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் புறக்கணிப்பால் தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா திமுக

ஈரோடு

அதிருப்தி ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவினர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்சியினரை அழைக்காமல் புறக்கணிப்பது தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என திமுக நிர்வாகிகள்  கருதுகின்றனர்.

ஈரோடு வடக்கு திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் மீதுள்ள அதிருப்தியால் வடக்கு மாவட்டத்தில் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கட்சியினருக்கு சரியான அழைப்பு விடுப்பது கிடையாது. கட்சியினரை புறக்கணிப்பு செய்வது போல மாவட்டச் செயலாளர் நடந்து கொள்வதாக கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் திமுக தீவிரமாக களமிறங்கி உள்ளது. கடந்த தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் வரும் தேர்தலில் திமுக களம் இறங்க திட்டமிட்டுள் ளதாகத் தெரிகிறது. இவ்வாறான நிலையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் நலத்திட்ட பணிகளுக்கு கட்சியினருக்கு சரியான அழைப்பு விடுப்பதில்லை என மூத்த நிர்வாகிகள் கவுன்சிலர்கள் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து கட்சியினரை புறக்கணிப்பு செய்தால் தேர்தல் பணியை யார் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது .தேர்தல் பணி சரியாக செய்யாமல் போனால் பின்னடைவை சந்திக்க நேரிடும் என கட்சியினர் கருதுகின்றனர்.

திமுக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் கடுமையாக நிலவி வருகிறது. சமீபத்தில் நடந்த இளைஞர் அணி மாநாடு நிதி வசூல் செய்து கட்சி மேலிடம் நிதி கொடுக்கப்பட்ட போது தன்னிச்சையாக மாவட்ட செயலாளர் நடந்து கொண்டதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

அதேபோல் பாஜகவை ஆதரித்து தனது ட்விட் பக்கத்தில்
பாஜக ஐடி விங் தொடர்பான கருத்து படம் வெளியிட்டது திமுக தொண்டர்களுக்கு மேலும் அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கு பாஜக தரப்பில், தமிழ்நாடு பிஜேபியின் ஐடி விங் அன்று சொங்கியாக இருந்தது இன்று சிங்கம் போல உள்ளது என வெளிப்படையாக பாராட்டவும் தாராள மனசு வேண்டும், வளர்க திமுக என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு நடந்து கொள்வது கட்சியினருக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது நலத்திட்ட பணிகள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மூத்த நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள் கவுன்சிலர்கள் என பலருக்கும் சரியான அழைப்பு விடுப்பது கிடையாது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு நிர்வாகிகளை புறக்கணிப்பு செய்வது கட்சியினருக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது .தேர்தல் பணியை யார் செய்வார்கள் என்ற கேள்வியையும் எங்களுக்குள் எழுந்துள்ளது.

கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள் ளார் ஆனால் இவற்றை யாரும் மதிப்பது கிடையாது இவ்வாறே போனால் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த கூடும் என வருத்தம் தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top