புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பில்லமங்கலம் ஊராட்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்டுவற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம் பில்லமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பொண்ணழகி அம்மன் கோவில் முன்பாக கலையரங்கம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கை தொடர்பாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம் செய்த பரிந்துரையின் பேரில், சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் சார்பில் ரூ.7.50 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பில்லமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில், திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர். கணேஷ்பிரபு , திருமயம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆர். மணிகண்டன், திமுக பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கலையரங்கம் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கிய சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரத்துக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.