1986 ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதையும், கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிதலுடன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதையும் உணர்த்துவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இரு மனங்கள் இணைந்து அவர்களின் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ‘திருமண பந்தம்’, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது.
அன்பை பரிமாறிக் கொள்ளும் அழகான பந்தத்தில், ஆயிரம் தடைகள் வந்தாலும் ஆலமரம் போல் கம்பீரமாக இருக்க வேண்டும்.
ஆண்-பெண் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உறவுகளின் முக்கியத்துவம், மனிதனின் அடிப்படை உணர்வு, மகிழ்ச்சியின் மகத்துவம் ஆகியவை சார்ந்த வாழ்வின் அர்த்தத்தை திருமண பந்தமே உணர்த்தும்.
புரிதலின் அடிப்படையில் அன்பின் பரிமாற்றம் இருக்கும்போது, அந்த அழகான உறவு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.