Close
மே 20, 2024 6:13 மணி

புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய ஞான சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா

புதுக்கோட்டை

புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய ஞான சபையில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழா

புதுக்கோட்டை அருகே உள்ள புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய ஞான சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சன்மார்க்க கொடியினை தலைவர்  காத்தமுத்து  ஏற்றி வைத்துவழிபாடு நடைபெற்றது.

பின்னர் முதல்  காலம் முதல் 6 காலம் வரை அகவை பாராயணம் நடந்தது பின்னர் கோபுர கலசத்தில் சன்மார்க்க சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சன்மார்க்க சங்கத்தில் ஞான ஜோதி ஏற்றப்பட்டு  ஞான ஜோதி வழிபாடும் நடைபெற்றது  வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் செயலாளர் இரா. முத்தையா தலைமை வகித்தார்.

புத்தாம்பூர்  சன்மார்க்க சத்திய சங்கசெயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்  மாநில தலைவர் மாநிலத் தலைவர் அருள் நாகலிங்கம் கலந்து கொண்டு மாத்தூர் வள்ளலார் இல்ல மாணவர்கள் அனைவருக்கும் வள்ளலார் புத்தகங்களை வழங்கி  சிறப்புரை ஆற்றினார்.

புதுக்கோட்டை
புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய ஞான சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் பங்கேற்ற மாணவர்கள்

நிகழ்வில்  மன்னார்குடி வள்ளலார் தாசன்  பட்டுக்கோட்டை சரவணகுமார் திருமயம் பாரமலை ,தஞ்சை திருஞான சம்பந்தம்,கும்பகோணம் கண்ணபிரான், மருத்துவர் ராமதாஸ்,  குளத்தூர் பரமசிவம், மதிப்பியல் தலைவர் இலாபராசு மற்றும் மாணிக்கம், ராஜேந்திரன் முனைவர் நமச்சிவாயம், பேராசிரியர்  அழகப்பன் அடைக்கலம், கோட்டையூர் ராசு, ஆலந்தூர்வீரமணி   உள்ளிட்டோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை

புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய ஞான சபையில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழா பங்கேற்றோர்

புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொருளாளர் முனியமுத்து நன்றி கூறினார் மழையூர் எஸ் சதாசிவம் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.  பின்னர் நிறைவாக  பெரியநாயகி, திருநாவுக்கரசு தலைமையில்  ஜோதி வழிபாடு  நடைபெற்றது.

புதுக்கோட்டை புத்தாம்பூர் தென்னங்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் வருகை தந்து கலந்து கொண்டனர் ஏமாத்தூர் வள்ளலார் இல்ல மாணவர்கள்  வள்ளலார் பற்றிய வழிபாடுகள் பாடல்களை பாடினார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top