Close
அக்டோபர் 6, 2024 11:23 காலை

புத்தகம் அறிவோம்… கஸ்தூர்பா

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- கஸ்தூர்பா

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் ஆளுமைகளின் பிறந்தநாள், நினைவு நாள் இன்று.

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டத்தில் பங்கேற்று , “தாய் நாட்டிற்காக உயிரை விடுவதில் பெருமை அடைகிறேன்” என்று காந்தியிடம் சொல்லி,16 வயதில் மறைந்து போன தில்லையாடி வள்ளியம்மையின் பிறந்தநாள், நினைவு நாள் ( பிப்.22).

காந்தியோடு 65 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள் இன்று. நான் ” அகிம்சையைக் கற்றுக் கொண்டது என் மனைவியிடம் தான் ” என்று சொன்ன காந்தி, பாவின் மறைவின் போது ” என் உடலின் சிறந்த பாகத்தை இழந்து விட்டேன், ” என்றார்.
“கஸ்தூர்பா காந்தி ஒரு அதிசயப் பெண்மணி” என்கிறார், காந்தி திரைப்படம் மூலம் காந்தியின் பெயரை உலகெலாம் கொண்டு சென்ற ரிச்சர்ட் ஆட்டன்பரோ .

ஆனால் காந்தியைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற அளவிற்கு கஸ்தூரிபாவை பற்றி முழுமையாக எழுதப்படவில்லை. அந்த வகையில் காந்தியின் பேரன் அருண் காந்தி எழுதியிருக்கும் Kasturba-A life என்ற இந்த புத்தகம் ஒரு முழுமையான வரலாறு. அருண் காந்தி மணிலாலின் மகன். பாவை, காந்திக்கு இணையாக வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் அருண். ஒரு பேரன் தான் நேசித்த பாட்டிக்குச் செய்த மிகப்பெரிய மைமாறு இந்த நூல்.வெளியீடு , பென்குவின், விலை-ரூ.295.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top